Wednesday, February 2, 2011

விதவிதமான முட்டை சைட் டிஷ்கள்

ஒரு கோழி போடுற முட்டை அதில என்னென்ன விதவிதமா சமையல் செய்யலாம் என பாருங்கள் நண்பர்களே !.


அவித்த முட்டை (Boiled Egg)
முட்டையைத் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் போட்டு 10 நிமிடம் அவித்து எடுக்கவும். தண்ணீரில் உப்பு சேர்த்தால் ஓடு உடையாது.


ஆஃப்பாயில்(ட்) (Half Boiled egg)
முட்டையை தோசைக்கல்லில் மஞ்சள் கரு உடையாமல் ஊற்றி உப்பும், மிளகுத்தூளும் சேர்த்தபின் அடிப்பாகம் வெந்தபின் திருப்பிப் போடாமல் மஞ்சள் கரு உடையாமல் அப்படியே அரைவேக்காட்டில் சாப்பிடவேண்டும். அதை மஞ்சள் கரு உடையாமல் சாப்பிடுவதுதான் திறமையே !

ஃபுல்பாயில்(ட்) (Fully boiled)
மேலே சொன்ன ஆஃப்பாயிலை திருப்பிப் போட்டு வெந்தபின் எடுத்து சாப்பிடுவது.


ஆம்லெட் (Omlette)
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
3. பின் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து ஊற்றி வெந்தபின் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும்


பிளைன் ஆம்லெட் (Plain Omlette)
மேலே சொன்ன ஆம்லெட்டில் வெங்காயம், மிளகாய் போடாமல் செய்யவேண்டும்.

ஒன் சைட் ஆம்லெட் (One side Omlette)
ஆம்லெட்டை திருப்பிப் போடாமல் அடிப்பாகம் மட்டும் வேகவிட்டு எடுத்து சாப்பிட வேண்டும்.


ஒயிட் ஆம்லெட் (White Omlette)
ஆம்லெட்டின் செய்முறையில் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு (கொஞ்சம் கடினம் தான்) செய்ய வேண்டும்.

ஒயிட் பிளைன் ஆம்லெட் (White Plain Omlette)
பிளைன் ஆம்லெட்டின் செய்முறையில் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு (கொஞ்சம் கடினம் தான்) செய்ய வேண்டும்.

கலக்கி (Kalakki)
1. முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
2. அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகாய், உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கிக் கொள்ளவும்.
3. சிக்கன் அல்லது மட்டன் குழம்பு சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
3. பின் தோசைக்கல்லில் எண்ணெய் சேர்த்து ஊற்றி அரைவேக்காட்டில் கொழ கொழவென புரட்டி புரட்டி பந்து போல செய்து சாப்பிடலாம்.

இதன் சுவையை அடித்துக் கொள்ளவே முடியாது.

முட்டை பொரியல்/பொடிமாஸ் (Egg Podimas)
இதற்கும் ஆம்லெட்டின் செய்முறைதான் நன்றாகக் கிளறி விட்டால் முட்டை சுருங்கிவிடும். நல்ல சுவையாக இருக்கும்


முட்டைமாஸ் (Egg mass)
1. அவித்த முட்டையை நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. தோசைக்கல்லில் சிறிது சிக்கன் அல்லது மட்டன் குழம்பை முட்டையுடன் சேர்த்து சிறிது நேரம் சமைத்தால் சுவையான முட்டைமாஸ் தயார்.

கொலைவெறியோட என்னைய தேடாதீங்க. மேலே சொன்ன அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தது தான். இருந்தாலும் இதுகூடத் தெரியாத நம்ம பாசக்கார பேச்சிலர் பயலுக பாவம் கூச்சப்பட்டுக்கிட்டு யார்கிட்ட போய் கேக்கும்? எனவே தாயுள்ளம் கொண்டு அனைத்தையும் சொல்லியிருக்கேன். :)